Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 14, புதன்கிழமை
Editorial / 2019 நவம்பர் 24 , மு.ப. 11:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
அடுத்துவரும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில், எதிர்க்கட்சித் தலைவர் பதவி தொடர்பில் தீர்மானமொன்று எடுக்கப்பட வேண்டும் என, நாடாளுமன்ற உறுப்பினர் அசோக அபேசிங்க தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களில் அதிகளவானவர்கள், முன்னாள் அமைச்சர் சஜித் பிரேமதாசவை, எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்குமாறு, கட்சியின் தலைவரிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
முன்னாள் அமைச்சர் சஜித் பிரேமதாசவுக்கு, எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் கட்சியின் தலைமை பதவியை வழங்காவிட்டால், எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடுவதை தவிர்த்துகொள்ளவுள்ளதாக கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் சிலர் தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது குறித்து, நாடாளுமன்ற உறுப்பினர் அசோக அபேசிங்க கருத்து வெளியிடுகையில், “ சில தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன. அவற்றை எதிர்காலத்தில் அறிவிப்போம். மக்கள் எம்முடன் உள்ளனர். கட்சியில் உள்ள சிலர் தொடர்பில் மக்கள் தேர்தலில் தீர்மானிப்பார்கள்” என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .