Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2019 நவம்பர் 12 , பி.ப. 01:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் மீதான தடையை மேலும் 5 வருடங்கள் நீட்டிப்பதாக இந்தியா அறிவித்துள்ளது.
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை நிகழ்ந்த பிறகு, விடுதலைப் புலிகள் அமைப்பின் மீது இந்திய மத்திய அரசு 5 ஆண்டு தடை விதித்து, தொடர்ந்து அதை நீட்டித்து வருகிறது.
அதன்படி, 5 ஆண்டுக்குமுன் விடுதலைப் புலிகள் மீது போடப்பட்ட தடை, கடந்த மே மாதம் முடிவடைந்தது. தடை நீடிக்கப்படக் கூடாது என பல்வேறு தரப்பினர் கோரிக்கை வைத்து வந்த நிலையில், கடந்த மே மாதம் 14ஆம் திகதி இந்திய மத்திய உள்துறை அமைச்சகம் தடையை 5 ஆண்டுகள் நீட்டித்தது.
தடை நீட்டிக்கப்பட்டது குறித்து மத்திய உள்துறை அமைச்சகம், ‘தனி ஈழம் என்ற கோரிக்கையை விடுதலைப் புலிகள் அமைப்பு இப்போதும் கைவிடவில்லை. மீண்டும் விடுதலைப் புலிகள் அமைப்பை உருவாக்க பல்வேறு நாடுகளில் நிதி வசூலிக்கப்படுகிறது.
சிதறிக் கிடப்பவர்களை ஒன்று திரட்ட பல்வேறு முயற்சிகள் நடக்கிறது. இதனால் விடுதலைப் புலிகள் மீதான தடை நீட்டிக்கப்படுகிறது’ என விளக்கம் அளித்தது.
5 ஆண்டு தடை நீடிக்கப்பட்டதுக்குத் தமிழ்நாடு, இலங்கைத் தமிழர்கள் உள்பட பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதுகுறித்து மத்திய அரசுக்குக் கோரிக்கைகளும் குவிந்தன.
இதையடுத்து, டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதிகள் 2 பேர் தலைமையில் தீர்ப்பாயம் ஒன்று அமைக்கப்பட்டு தடைக்கு எதிர்ப்பு தெரிவித்தவர்களின் கருத்துக் கேட்கப்பட்டது.
இந்த தீர்ப்பாயத்தின் முன் விடுதலைப் புலிகள் ஆதரவாளர்கள் உள்பட, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ எனப் பலர் ஆஜராகி தடை வேண்டாம் என்பதுக்கான விளகத்தை அளித்துவிட்டு வந்தனர். தீர்ப்பாயம் டெல்லி, சென்னையில் கருத்துக்களைப் பெற்றுக் கொண்டது.
இந்நிலையில், தீர்ப்பாயம் மத்திய அரசு விதித்த தடையை உறுதி செய்து, அதுகுறித்த தகவலை அரசுக்கு அனுப்பியுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
31 minute ago
47 minute ago
55 minute ago