Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2025 பெப்ரவரி 11 , பி.ப. 03:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
இரத்தினபுரி மாவட்டம் நிவித்திகல வலயக் கல்வி பிரிவிற்குட்பட்ட எந்தான மீனாட்சியம்மாள் பாடசாலையின் அதிபரை பணி நீக்கம் செய்யுமாறு கோரி பெற்றோர்களால் செவ்வாய்க்கிழமை (12) காலை பாடசாலையின் பிரதான நுழைவாயிலுக்கு அருகில் அமைதியான ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
ஆர்ப்பாட்டத்தில் அதிகளவிலான பெற்றோர்கள் மற்றும் பாடசாலையின் பழைய மாணவர்கள் கலந்து கொண்டிருந்ததுடன் சுமார் இரண்டு மணித்தியாலம் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தற்போது குறித்த பாடசாலையில் கடமையாற்றுகின்ற அதிபர் கடந்த 2019ஆம் ஆண்டு பாடசாலையின் கடமைகளை பொறுப்பேற்றுள்ளார் அன்று முதல் இன்று வரை பாடசாலையில் எந்தவொரு வளர்ச்சியும் இல்லை என தெரிவித்த ஆர்ப்பாட்டக்காரர்கள் அதிபர் மீது மேலும் பல குற்றச்சாட்டுகளை முன்வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டம் நடைபெற்ற இடத்திற்கு வருகை தந்த நிவித்திகல வலயக் கல்வி அதிகாரியிடம் பெற்றோர்கள் அதிபர் தொடர்பான பிரச்சினைகளை கவலையுடனும் கண்ணீர் விட்ட வாரும் முன்வைத்துள்ளதுடன் அவர்களின் பிரச்சினைகளை கேட்டறிந்த அதிகாரி பெற்றோர்களுடன் பாடசாலைக்குள் சென்று இது தொடர்பில் பிரதி அதிபருடன் கலந்துரையாடியுள்ளார்.
பின்னர் பாடசாலையில் உள்ள மாணவ மாணவிகளுடைய மற்றும் ஆசிரியர்களுடைய பதிவு புத்தகங்கள் பார்வையிட்ட அதிகாரி பதிவு புத்தகங்களில் பிழைகள் உள்ளதாக ஒப்புக்கொண்டு பெற்றோர்கள் முன்வைத்த பிரச்சினைக்கு எதிர்வரும் திங்கட்கிழமை (17) பதில் வழங்குவதாக கூறியுள்ளார்.
மஹிந்த குமார்
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago