Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kogilavani / 2015 ஒக்டோபர் 19 , மு.ப. 08:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஆர்.கோகுலன்
ஊவா- பரணகம பிரதேச செயலாளரை இடமாறக்கோரி, ஊவா பரணகம பிரதேச மக்கள் இன்று (19), லூனுவத்தை நகரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மேற்படி பிரதேச செயலாளருக்கு இரண்டு வாரங்களுக்கு முன்பாக மஹியங்கனை பிரதேச செயலகத்துக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ள போதிலும், அவர் அதற்கு இணங்காது தொடர்ந்து ஊவா- பரணமகவில் கடமையாற்றி வருவதால் பிரதேச மக்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டக்காரர்கள் பிரதேச செயலகத்தை நோக்கி செல்ல முற்பட்டதை தொடர்ந்து, இவர்களை கட்டுப்படுத்துவதற்காக கலகத்தடுப்பு பொலிஸார் வரவழைக்கப்பட்டதுடன் பிரதேச செயலகத்துக்கும் பலத்த பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டது.
இரண்டு மணித்தியாலங்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த மக்கள், பின்னர் பொலிஸாரின் பணிப்புரைக்கு அமைவாக கலைந்து சென்றனர்.
5 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
8 hours ago