Janu / 2026 மார்ச் 01 , பி.ப. 05:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை பத்திரிகை ஸ்தாபனம் (SLPI) மற்றும் இலங்கைக்கான நெதர்லாந்து தூதரகம் ஆகியவை இணைந்து நடத்தும், 'உலகப் பத்திரிகை புகைப்படக் கண்காட்சி 2025' இன் ஆரம்ப நிகழ்வு ஒன் கால் ஃபேஸ் (One Gallface) வணிக வளாகத்தின் பெய்ரா ஏட்ரியத்தில் வௌ்ளிக்கிழமை (27) நடைபெற்றது.
வெகுஜன ஊடக பிரதி அமைச்சர் கௌசல்யா ஆரியரத்ன தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்ட இந்த கண்காட்சியை எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (08) வரை பொது மக்கள் பார்வையிடலாம்.
141 நாடுகளைச் சேர்ந்த 3,778 புகைப்படக் கலைஞர்களின் சுமார் 61,000 படைப்புகளிலிருந்து தெரிவு செய்யப்பட்ட மிகச்சிறந்த புகைப்படங்கள் இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. 31 சர்வதேச நடுவர்களால் மதிப்பாய்வு செய்யப்பட்டு, இறுதிப் பட்டியலுக்குத் தேர்வான 42 கலைஞர்களின் படைப்புகள் இதில் அடங்கும்.
குறிப்பாக, தெரிவு செய்யப்பட்ட கலைஞர்களில் 30 பேர் தத்தமது சொந்த நாடுகளின் வாழ்வியலையும் சவால்களையும் பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.







3 hours ago
7 hours ago
18 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
7 hours ago
18 Mar 2026