Editorial / 2025 ஒக்டோபர் 05 , மு.ப. 09:31 - 0 - {{hitsCtrl.values.hits}}

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 29 ஆவது பொதுப்பட்டமளிப்பு விழா வந்தாறுமூலை வளாக நல்லையா ஞாபகார்த்த மண்டபத்தில் சனிக்கிழமை (04) ஆரம்பமானது.
கிழக்குப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் பரராஜசிங்கம் பிரதீபன் தலைமையில் ஆரம்பமான பட்டமளிப்பு விழாவின் முதலாம் நாளில் பிரதம அமைச்சரின்; செயலாளர் ஜி. பிரதீப் சபுதந்திரி பிரதம விருந்தினர்களாக கலந்து கொண்டார்.
பட்டமளிப்பு விழாவில் 1966 உள்வாரி, வெளிவாரி மாணவர்களுக்கான பட்டப்படிப்பு மற்றும் பட்டப்பின் படிப்பு பட்டங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
முதலாம் நாளான சனிக்கிழமை (04) முதலாவது அமர்வின் போது சிவசுப்ரமணியம் பத்மநாதனுக்கு கலாநிதி பட்டம் வழங்கப்பட்டது. முதலாவது அமர்வின் போது 240 பட்டதாரிகளுக்கும், இரண்டாவது அமர்வின் போது 345 பட்டதாரிகளுக்கும்,, மூன்றாவது அமர்வின் போது 400 பட்டதாரிகளுக்கும் முதுமாணி, இளங்கலைமாணி உட்பட விவசாயத்துறை, கலைத்துறை, வணிக முகாமைத்துவ துறை மற்றும் அழகியல் கற்கைகள் துறை, மருத்துவத்துறை, விஞ்ஞானத்துறை மற்றும் சித்த மருத்துவத்துறைகளில் பட்டங்கள் வழங்கப்பட்டன.
பேரின்பராஜா சபேஷ்













6 hours ago
25 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
25 Oct 2025