Janu / 2026 பெப்ரவரி 25 , பி.ப. 03:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் (PTA) மற்றும் முன்மொழியப்பட்டுள்ள புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டங்களுக்கு (PSTA) எதிர்ப்புத் தெரிவித்து, மன்னார் மாவட்டத்தில் புதன்கிழமை (25) அன்று பாரிய கையெழுத்துப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில், மன்னார் பிரதான பேருந்து நிலையத்திற்கு முன்பாக இந்த நிகழ்வு நடைபெற்றது. இதில் மீனவ சங்கப் பிரதிநிதிகள், சிவில் சமூக அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டு தமது எதிர்ப்பைப் பதிவு செய்தனர்.
இதன்போது பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை நீக்க வேண்டும் மற்றும் புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட வரைவை உடனடியாக மீளப்பெற வேண்டும்.ஊடக சுதந்திரம் மதிக்கப்பட வேண்டும், நீதித்துறையின் சுயாதீனத்திற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும். மக்களின் அடிப்படை மனித உரிமைகளைப் பேண வேண்டும் மற்றும் அடக்குமுறைச் சட்டங்களுக்கு எதிராக மக்கள் ஒன்றிணைய வேண்டும்.உயிர் வாழ்வதற்கான உத்தரவாதம் அளிக்கப்பட வேண்டும் மற்றும் மனித மாண்பு சிதைக்கப்படாமல் பாதுகாக்கப்பட வேண்டும்.ஆகிய கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன
எஸ்.ஆர்.லெம்பேட்





4 hours ago
8 hours ago
18 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
8 hours ago
18 Mar 2026