R.Tharaniya / 2025 மார்ச் 10 , மு.ப. 10:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
யாழ் பல்கலைக்கழக பொறியியல் பீடத்தால் முன்னெடுக்கப்படும் மாற்று வலுவுடையவர்களுக்கான செயற்கை அவயவங்களைப் பொருத்தும் செயற்றிட்டத்தின் கீழ் வடக்கு கிழக்கு மாகாணங்களை சேர்ந்த 20 பயனாளர்களுக்கு இந்தியாவில் செயற்கை அவயங்கள் பொருத்தப்பட்டது.
கடந்த புதன்கிழமை (5) இருபது பேரும் யாழ்ப்பாணத்தில் இருந்து இந்தியாவுக்கு புறப்பட்டு சென்று சிறப்பு செயற்றிட்ட முகாம் ஒன்றில் பங்கெடுத்ததுடன், அங்கு அவர்களுக்கான செயற்கை அவயவங்கள் பொருத்தப்பட்டது.
இந்நிலையில் இருபது பயனாளிகளும் ஞாயிற்றுக்கிழமை(9) இந்தியாவில் இருந்து யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தனர்.வடக்கு கிழக்கு மாகாணங்களில் உள்ள யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு அங்கவீனர்களாக்கப்பட்டவர்களுக்கு செயற்கை அவயவங்களை வழங்குவதே இச்செயற்றிட்டத்தின் நோக்கமாகும்.
குறித்த செயற்றிட்ட மானது யாழ் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் கே.செல்வகுமாரினால் ஆரம்பிக்கப்பட்டதுடன், Canada Fund for Local Initiative மற்றும், Canada Sri Lanka Business Convention ஆகிய அமைப்புகளால் நிதி வழங்கப்படுகிறது.இச்செயற்றிட்டத்தின் முதல் கட்டம் வெற்றிகரமாக பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்த பேராசிரியர் செல்வகுமார்,
குறித்த செயற்றிட்டத்துக்கு இடையூறாக எவரும் செயல்பட வேண்டாம் என வேண்டுகோள் விடுத்தார்.இதேவேளை குறித்த செயற்றிட்டம் தொடர்பாக கருத்து தெரிவித்த பயனாளர்கள், உண்மையிலேயே இந்த செயற்றிட்டத்தின் மூலம் எமக்கு பெரிய உதவி கிடைத்துள்ளது. இதனை ஏனையவர்களும் பயன்படுத்த வேண்டும் - என்றனர்.கிளிநொச்சி அறிவியல் நகரில் செயற்கை அவயவங்கள் உற்பத்தி மையம் ஒன்றை உருவாக்கவும், மாற்றுவலுவுடையவர்களால் குறித்த மையம் நடாத்தப்படவும் எதிர்பார்ப்பதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
|




43 minute ago
47 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
43 minute ago
47 minute ago