2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

துயர் வேண்டாம்...

Princiya Dixci   / 2015 நவம்பர் 12 , மு.ப. 04:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

காணாமல் போனோர் தொடர்பாக ஆராயும் ஐக்கிய நாடுகள் சபை செயற்குழுவின் பிரதிநிதிகள், நேற்று புதன்கிழமை (11) மாலை  மன்னாருக்கு விஜயம் மேற்கொண்டு காணாமல் போனோர்களின் உறவினர்களை சந்தித்து தகவல்களைப் பெற்றுக்கொண்டனர். 

ஐக்கிய நாடுகள் சபை செயற்குழுவின் பிரதிநிதிகள் 5 பேர் அடங்கிய குழு, காணாமல் போனவர்களின் குடும்பப் பிரதிநிதிகள் 40 பேரிடம் விசாரணைகளை மேற்கொண்டனர்.

மன்னார் பிரஜைகள் குழு மற்றும் பொது அமைப்புக்கள் இணைந்து இதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டிருந்தன. 
காணாமல் போனவர்களின் உறவினர்கள் சுமார் 200 பேர், மன்னார் கீரி ஞானோதய மண்டபத்துக்கு முன்பாக ஒன்று கூடி காணாமல் போனவர்களின் புகைப்படங்களை ஏந்தியவாறு காணப்பட்டனர். (படப்பிடிப்பு: எஸ்.றொசேரியன் லெம்பேட்)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .