2024 ஜூன் 16, ஞாயிற்றுக்கிழமை

பவள விழா பேரணி

Mayu   / 2024 ஜூன் 09 , பி.ப. 01:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

வ.சக்தி        

மட்டக்களப்பு பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட  எருவில் கண்ணகி மகா வித்தியாலயத்தின் 75 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு பவள விழா நிகழ்வுகள் மாபெரும் வாகன பேரணியாக சனிக்கிழமை (08) முன்னெடுக்கப்பட்டிருந்தது.

கண்ணகி மகா வித்தியாலயத்தின் அதிபர் சிவநேசராசா தீபதர்சன்  தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்ட  நிகழ்வில் பழைய  மாணவர்களினால் நிர்மானிக்கப்பட்ட பவள விழா நினைவுத் தூபி வித்தியாலயத்தின் பிரதான வாயிலுக்கு அருகாமையில் பாடசாலை 1949 ஆண்டு முதல் முதலாக நிர்மானிக்கப்பட்ட போது முதல் மாணவியாக சேர்த்துக் கொள்ளப்பட்ட  பழைய மாணவியினால்  திறந்து வைக்கப்பட்டது.

இப்பேரணியில் பழைய மாணவர்கள், ஆசிரியர்கள், பாடசாலை மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பாடசாலை நலன் விரும்பிகள் என பலர்  பங்கேற்றிருந்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .