Mithuna / 2023 டிசெம்பர் 06 , பி.ப. 12:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
வி.ரி. சகாதேவராஜா
அம்பாறை மாவட்ட பெண்கள் வலையமைப்பின் 16 நாள் செயற்பாட்டு வாதத்தின் ஓரங்கமாக புதன்கிழமை (06) காரைதீவில் இருந்து கல்முனை வரை பெண்கள் பேரணி இடம் பெற்றது. இந்த பேரணி காரைதீவு ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலய முன்றலில் இருந்து ஆரம்பமானது.


"வீட்டு வன்முறையை இல்லாது ஒழிப்போம், சிறுவர் உரிமையை பாதுகாப்போம், பெண்கள் உரிமையை பாதுகாப்போம், பெண்கள் சிறுவர்கள் வன்முறைக்கு எதிராக குரல் கொடுப்போம், ஆண் பெண் சமத்துவம் பேணுவோம், பணிப் பெண்களாக வெளிநாடு செல்லும் பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவோம், வேலைக்கு செல்லும் பெண்களின் பாதுகாப்பில் கவனம் செலுத்துவோம், பேருந்துகளில் செல்லும் பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவோம்" போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை இந்த ஊர்வலத்தில் சென்றோர் கொண்டு சென்றனர் .

1 hours ago
1 hours ago
2 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
2 hours ago
5 hours ago