Janu / 2025 ஓகஸ்ட் 31 , மு.ப. 09:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தினத்தையொட்டி வடக்கு , கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர் சங்கத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு கல்லடி பாலத்துக்கு அருகில் இருந்து காந்தி பூங்காவை நோக்கி பேரணியொன்று சனிக்கிழமை (30) நடைபெற்றது.
மட்டக்களப்பு கல்லடி பழைய பாலத்திற்கு அருகில் உயிர் நீத்த உறவுகள் மற்றும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடி உயிர் நீத்த உறவுகளை நினைவுகூறும் வகையில் ஈகச்சுடர் ஏற்றப்பட்டு அகவணக்கம் செலுத்தப்பட்டதை தொடர்ந்து பேரணி ஆரம்பமானது.
வலிந்துகாணாமல்ஆக்கப்பட்டவர்களின் வேதனைகளையும் நீதிக்கோரிக்கையினையும் சுமந்தவாறு வாகன ஊர்தி முன்செல்ல பேரணி மட்டக்களப்பு நகரை நோக்கிச் சென்றது.
ஆயிரக்கணக்கான வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளை மற்றும் காணாமல் போன தமது உறவுகளின் புகைப்படங்களை எந்தியவாறும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
வா.கிருஷ்ணா








6 minute ago
13 minute ago
16 minute ago
20 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
13 minute ago
16 minute ago
20 minute ago