Editorial / 2025 ஜனவரி 06 , மு.ப. 10:13 - 0 - {{hitsCtrl.values.hits}}

மாமனிதர் குமார் பொன்னம்பலத்தின் 25வது ஆண்டு நினைவு தினம் யாழ் கலைத்தூது மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை (05) இடம்பெற்றது .
முதன்மை நிகழ்வாக மாமனிதர் குமார் பொன்னம்பலத்தின் புதல்வனும் பாராளுமன்ற உறுப்பினரும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் தலைவருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தினால் பொதுச்சுடர் ஏற்றப்பட்டது.
தொடர்ந்து குமார் பொன்னம்பலத்தின் திருவுருவப் படத்திற்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டதோடு மலரஞ்சலியும் செலுத்தப்பட்டது. தொடர்ந்து குமார் பொன்னம்பலத்தின் நினைவு உரைகள் இடம்பெற்றது.
“மக்கள் மயப்படுத்தவேண்டிய அரசியல்" எனும் தலைப்பில் நினைவுப் பேருரையை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீட பீடாதிபதி பேராசிரியர் சிவசுப்பிரமணியம் ரகுராம் மேற்கொண்டார்.
இதன் பொழுது இலங்கை தமிழரசு கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடக பேச்சாளர் சுகாஷ், யாழ் பல்கலைக்கழக கலைப்பீடாதிபதி பேராசிரியர் ரகுராம் , பேராசிரியர்கள் , ஊடக நிறுவனங்களின் நிர்வாக இயக்குனர்கள் , பத்திரிகை பிரதம ஆசிரியர்கள் ,சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
நிதர்ஷன் வினோத்





























21 minute ago
32 minute ago
36 minute ago
48 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
32 minute ago
36 minute ago
48 minute ago