Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2020 மே 18 , பி.ப. 01:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சண்முகம் தவசீலன்
முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியில் நினைவேந்தல் மிகவும் உணர்வு பூர்வமாக இன்று (18) இடம்பெற்றது
10.30 மணிக்கு அகவணக்கம் செலுத்தப்பட்டு முள்ளிவாய்க்காலில் தனது கணவன் மற்றும் தனது பிள்ளையை பறிகொடுத்த இலட்சுமணன் பரமேஸ்வரி என்பவரால் பொதுச்சுடர் ஏற்றப்பட்டது.
அத்துடன், ஏனைய உறவுகளுக்கான சுடர்கள் ஏற்றப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டதோடு முள்ளிவாய்க்கால் நினைவு பிரகடனம் வெளியிடப்பட்டது
நாட்டில் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ள நிலைமையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் சுகாதார நடைமுறைக்கு அமைவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
இருப்பினும் பொலிஸார், இராணுவத்தினர் மற்றும் இராணுவ புலனாய்வாளர்களின் நெருக்கடிகளுக்கு மத்தியில் மக்கள் ஒன்று கூடினர்.
சுகாதாரப் பிரிவினர் வருகை தந்து சுகாதார நடைமுறைகளை பார்வையிட்டு உறுதிப்படுத்திய பின்னர் உரிய சுகாதார நடைமுறைகளுக்கு அமைய இந்த நினைவேந்தல் நிகழ்வுகள் உணர்வுபூர்வமாக இடம்பெற்றிருந்தன.
இந்த நிகழ்வில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் ஸ்ரீதரன் , சாள்ஸ் நிர்மலநாதன் , முன்னாள் வடக்கு மாகாண சபை அமைச்சர்களான அனந்தி சசிதரன் , கந்தையா சிவநேசன் , மாகாணசபை உறுப்பினர்களான துரைராசா ரவிகரன் ,ஆண்டியையா புவனேஸ்வரன் , மற்றும் முன்னாள் யாழ். மாநகர மேஜர் இம்மானுவேல் ஆர்னோல்ட் மற்றும் ஜனநாயக மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவர் பிரபா கணேசன் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.
10 minute ago
47 minute ago
56 minute ago
57 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
47 minute ago
56 minute ago
57 minute ago