Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2020 ஜனவரி 26 , பி.ப. 04:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
வெற்றுச் சுவர்களை அழகுபடுத்தும் வேலைத்திட்டத்தின் கீழ், கல்முனை இளம் பட்டதாரிகள் அமைப்பினால் மத நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையில் கல்முனை பொலிஸ் நிலைய சுவர்களில் ஓவியம் வரையும் செயற்றிட்டம் முன்னெடுக்கப்படுள்ளது.
அதன் முதற்கட்டமாக, கல்முனையின் பெயர் நாமம், கல்முனைப் பிராந்தியத்தில் காணப்படும் மதஸ்த்தலங்களையும் முப்பரிமாண படமாக வரையும் வேலைகள் முடிவடைந்த நிலையில் மக்கள் பார்வைக்காக திறந்துவிடப்பட்டது.
கல்முனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி கே.எச்.சுஜித் பிரியந்தவின் தலைமையில் சுவர் ஓவியத்தை திறந்துவைக்கும் வைபவம், கல்முனை பொலிஸ் நிலையத்தில் நடைபெற்றது.
இதன்போது, சவளக்கடை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ரம்சி பக்கீர், பொலிஸ் பரிசோதகர்களான என்.பி.விஜயரட்ன, ஏ.எல் ஏ.வாஹிட், இளம் பட்டதாரிகள் அமைப்பின் உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.
(படங்கள்: எம்.என்.எம்.அப்ராஸ், எஸ்.அஷ்ரப்கான், றாசிக் நபாயிஸ்)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .