2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

விடுதலை கோரி உண்ணாவிரதம்

Thipaan   / 2015 ஒக்டோபர் 17 , மு.ப. 11:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடமலை ராஜ்குமார், எஸ்.சசிக்குமார்

தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்கக்கோரி திருகோணமலை உட்துறைமுக வீதி சந்தியில் கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தின் முன்னால், இன்று சனிக்கிழமை(17) அடையாள உண்ணாவிரதம் மேற்கொள்ளப்பட்டது.

தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் உறவினர்களும், மதகுருமார்களும். அரசியல்வாதிகளும் இதில் கலந்துகொண்டார்கள்.

திருகோணமலை மறை மாவட்ட ஆயர் நோயல் இமானுவேல் கிழக்கு மாகாண கல்வி பண்பாடு விளையாட்டு மீள்குடியேற்ற அமைச்சர் சி.தண்டாயுதபாணி, கிழக்குமாகாண சபை உறுப்பினர் ஜெ.ஜனார்த்தனன் ஆகியோரும் இதில் பங்கு கொண்டனர்.

சிறைகளில் உள்ளவர்களை விடுதலை செய்யக்கோரி மகஜர் ஒன்றும்  உண்ணாவிரதத்தில் ஈடுபட்டவர்களால் ஒப்பமிடப்பட்டது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .