2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

சிரார்த்த தினம்...

Princiya Dixci   / 2015 மே 01 , மு.ப. 07:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸவின் 22ஆவது சிரார்த்த தினம், அளுத்கடை நீதிமன்ற வளாகத்தில் உள்ள அன்னாரது உருவச்சிலை முன்பாக இன்று வெள்ளிக்கிழமை (01) அனுஷ்டிக்கப்பட்டது.

இதில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, ரணசிங்க பிரேமதாஸவின் புதல்வரும் வீடமைப்பு மற்றும் சமுர்த்தி அமைச்சருமான சஜித் பிரேமதாஸ உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

1993ஆம் ஆண்டு மே மாதம் முதலாம் திகதி கொழும்பில் நடைபெற்ற மே தின ஊர்வலத்தின்போது தமிழீழ விடுதலைப் புலிகளின் தற்கொலை குண்டுத்தாக்குதலில் முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸ பலியானார். (படங்கள்: கித்சிறி டி மெல்)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X