2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

யாத்திரை நிறைவு...

Sudharshini   / 2015 மே 05 , பி.ப. 12:35 - 0     - {{hitsCtrl.values.hits}}


ரஞ்சித் ராஜபக்ஷ, செ.தி.பெருமாள்

சிவனொளிபாத மலை உச்சியிலிருந்து சமன் தெய்வத்தையும் பூஜை பொருட்களையும்; நோட்டன் லக்சபான இராணுவ முகாமை சேர்ந்த இராணுவத்தினர் நல்லதண்ணி நகரிலுள்ள பௌத்த மண்டபத்திற்கு இன்று செவ்வாய்க்கிழமை (05) சுபநேரத்தில் எடுத்து வந்தனர்.  

சிவனொளிபாதமலைக்கு பொறுப்பான தேரரின் அனுசாசன முறையின் பின், பிரித் ஓதப்பட்டு நாளை புதன்கிழமை (06) காலை வாகன தொடரணி இடம்பெறவுள்ளது.

நோட்டன் லக்சபான வழியாக கித்துல்கலை, கரவனல்ல, தெகியோவிட்ட, யட்டியந்தொட்ட, அவிசாவளை, இரத்தினபுரி வழியாக ரஜமாக விகாரைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கு பூஜைக்காக வைக்கப்படவள்ளது.

கடந்த வருடம் டிசம்பர் மாதம் ஆரம்பமான சிவனொளிபாதமலைக்கான யாத்திரைப் பருவக்காலம் நேற்று (04) நள்ளிரவுடன் நிறைவுபெற்றது.

வழமைப்போன்று இம்முறையும் பல இலட்சக்கணக்கான யாத்திரியர்கள் சிவனொளிபாதமலைக்கான யாத்திரையை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடதக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X