2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

ஆர்ப்பாட்டம்...

Sudharshini   / 2015 மே 09 , மு.ப. 09:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஞ்சித் ராஜபக்ஷ

ஹட்டன், டன்பார் பொது விளையாட்டு மைதானம் மூன்று மாதத்துக்கு மூடப்பட்டுள்ளதையடுத்து, மைதானத்தை உடனடியாக திறக்ககோரி ஹட்டன் இளைஞர்கள், நகரவாசிகள் உட்பட பலர் மைதானத்திற்கு முன்பாக இன்று (09)  காலை 8 மணியளவில்  ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

ஹட்டன் நகர மணிகூட்டு கோபுரத்திற்கு முன்னாலுள்ள பிரதான வீதியில் ஆர்ப்பபாட்டத்தில் ஈடுபட்டதுடன் வீதயில் பயிற்சிகளையும் மேற்கொண்டனர்.

அத்தோடு மைதானத்தை வியாபாரமாக்காதீர் ரூபாய் 5,500 அதிகமில்லையா, அரசியலுக்கு பொது மைதானத்தை அடகு வைக்காதே, நகர பிதாவுக்கு மட்டுமா மைதானம், பொது மைதானம் பொது மக்களுக்கு இல்லையா என பாதாதைகளை ஏந்தியாவாறு கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

மைதானம் 01.05.2015 அன்று முதல் 01.08.2015 மூடப்பட்டிருக்குமென அறிவித்தல் பலகை மைதானத்தின் நுழைவாயில் போடப்பட்டுள்ளது. இதனால் எங்களது பயிற்சிகளை மேற்கொள்ள முடியாமல் வேறு பல தூரங்களில் உள்ள வசதிவாய்ப்பு இல்லாத மைதானங்களுக்கு சென்று பயிற்சிகளை மேற்கொள்கின்றோம். 

முன்னால் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சின் ஊடாக பல கோடி ரூபாய் செலவழித்து இந்த மைதானத்தை அபிவிருத்தி செய்து கொடுத்தார். அபிவிருத்தி செய்து கொடுத்து 5 வருடங்கள் ஆகின்றன. 5 வருடங்களில் ஹட்டன், டிக்கோயா நகர சபை தலைவரால் தீடீரென மைதானம் மூடப்பட்டுள்ளது. முன்னர் 24 மணித்தியாலயமும் திறந்து காணப்படும். தற்போது மூடப்பட்டே காணப்படுகின்றது.

ஆனால், ஹட்டன் டிக்கோயா நகர சபை தலைவரும் அவருடைய நண்பர்கள் மட்டும் பயிற்சிகளில் ஈடுபட்டு செல்கின்றார்கள். இது ஒரு நியாயமற்ற செயலாகும் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் தெரிவிக்கின்றனர்.

இவ்விடயம் குறித்து ஹட்டன், டிக்கோயா நகரசபை தலைவர் அழகமுத்து நந்தகுமார்விடம் தொடர்பு கொண்டு வினாவியபோது, 

அத்தியவசிய புனர்நிர்மான நடவடிக்கைகள் காரணமாகவே மைதானம் மூடப்பட்டுள்ளது. மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்கவின் அனுமதியை பெற்று தான் இவ்வாறு மூடப்பட்டுள்ளது. மைதானத்தின் திருத்தப்பணிகள் தற்போது இடம்பெற்று வருகின்றது. எனினும் மூன்று  மாதத்திற்கு மைதானம் மூடப்படவிருந்தாலும் ஒரு மாதத்திற்குள் பணிகள் முடிவடைத்து மீண்டும் மைதானம் திறக்கப்படும் என அவர் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X