2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

விஜயம்...

Sudharshini   / 2015 மே 09 , மு.ப. 11:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

வா.கிருஸ்ணா

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், சனிக்கிழமை (08) மட்டக்களப்புக்கு விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்.

மட்டக்களப்பு, வந்தாறுமுலையில் கிழக்கு மாகாண அமைச்சர் கி.துரைராஜசிங்கத்தினை கௌரவிக்கும் நிகழ்வு வந்தாறுமூலை பொதுமக்களினால் ஏற்பாடுசெய்யப்பட்டிருந்தது.

வந்தாறுமுலை நீர்முகப்பிள்ளையார் ஆலய முன்றிலில் இந்த நிகழ்வு வெகு சிறப்பாக நடைபெற்றது.
வந்தாறுமூலை பொதுச்சந்தையில் இருந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களுக்கு கோலாகலமாக வரவேற்பளிக்கப்பட்டது.

தமிழித் தேசியக் கூட்டமைப்பின் தலைவருக்கு,  மட்டக்களப்பு மாவட்டத்தில் இவ்வாறான மாபெரும் வரவேற்பளிக்கப்படடமை இதுவே முதல்தடவையாகும்.

நீர்முகப்பிள்ளையார் ஆலயத்தில் நடைபெற்ற விசேட பூஜையினை தொடர்ந்து நிகழ்வுகள் நடைபெற்றன.

இந்நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், பொன்.செல்வராசா,பா.அரியநேத்திரன்,சீ.யோகேஸ்வரன்,கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான இரா.துரைரெட்னம்,ஞா.கிருஸ்ணபிள்ளை உட்பட பலர் கலந்துகொண்டனர். 

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X