R.Tharaniya / 2025 மே 25 , பி.ப. 02:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
கல்முனை கல்வி வலய சாய்ந்தமருது கல்விக் கோட்டத்தின் முன்னணி பாடசாலைகளில் ஒன்றான கமு/கமு/ அல்- ஹிலால் வித்தியாலய தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் வெற்றுப்புள்ளிக்கு மேல் பெற்று சித்தி பெற்ற மாணவர்களை கௌரவிக்கும் Sparkling Scholars - 2024 விழா அல் ஹிலால் வித்தியாலய கேட்போர் கூடத்தில் பாடசாலை அதிபர் யூ.எல்.நஸார் தலைமையில் இடம்பெற்றது.
இந் நிகழ்வில் தேசிய மக்கள் சக்தி தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் அபூபக்கர் ஆதம்பாவா அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டு மாணவர்களுக்கு சான்றிதழ்களையும் நினைவுச் சின்னங்களையும் வழங்கி கௌரவித்தார்.
மேலும் இந்நிகழ்வில் கல்முனை கல்வி வலய பிரதி கல்வி பணிப்பாளர் எம்.எச்.எம். ஜாபீர் கௌரவ அதிதியாக கலந்து கொண்டதுடன்
விசேட அதிதிகளாக கல்முனை கல்வி வலய பிரதி கல்வி பணிப்பாளர் எம்.எச். றியாசா, சாய்ந்தமருது கோட்டக்கல்வி பணிப்பாளர் அஸ்மா அப்துல் மலிக், ஓய்வு பெற்ற அதிபர் ஐ.எல்.ஏ. மஜீட்,
ஆசிரிய ஆலோசகர்கள், பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்று குழு செயலாளர் பொறியியலாளர் ஏ.சி. கமால் நிஷாத், பழைய மாணவர் சங்க செயலாளர் எம்.ஐ.எம். சர்ஜுன், ஆசிரிய ஆலோசகர்கள், ஏனைய பாடசாலை அதிபர்கள், பாடசாலை பிரதி அதிபர்கள், உதவி அதிபர்கள், மாணவர்களின் பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
நூருல் ஹுதா உமர்











28 minute ago
35 minute ago
38 minute ago
47 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 minute ago
35 minute ago
38 minute ago
47 minute ago