Editorial / 2018 டிசெம்பர் 06 , பி.ப. 09:33 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஸ்பானியக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான விலகல் முறையிலான கோப்பா டெல் ரே தொடரின் இறுதி 16 அணிகளுக்கான சுற்றுக்கு பார்சிலோனாவும் அத்லெட்டிகோ மட்ரிட்டும் முன்னேறியுள்ளன.
கல்சரல் லியோனேஸ்கா அணியுடனான தமது இறுதி 32 அணிகளுக்கான சுற்றின் முதலாவது சுற்றுப் போட்டியில் 1-0 என்ற கோல் கணக்கில் வென்றிருந்த பார்சிலோனா, தமது மைதானத்தில் இலங்கை நேரப்படி இன்று அதிகாலை நடைபெற்ற இரண்டாவது சுற்றுப் போட்டியில் 4-1 என்ற கோல் கணக்கில் வென்று 5-1 என்ற மொத்த கோல் கணக்கில் இறுதி 16 அணிகளுக்கான சுற்றுக்கு முன்னேறியது.
சன்ட் அன்றூ அணியுடனான இறுதி 32 அணிகளுக்கான சுற்றுப் போட்டியின் முதலாவது சுற்றுப் போட்டியில் 1-0 என்ற கோல் கணக்கில் வென்ற அத்லெட்டிகோ மட்ரிட், தமது மைதானத்தில் இலங்கை நேரப்படி இன்று அதிகாலை நடைபெற்ற இரண்டாவது சுற்றுப் போட்டியில் 4-0 என்ற கோல் கணக்கில் வென்று 5-0 என்ற மொத்த கோல் கணக்கில் இறுதி 16 அணிகளுக்கான சுற்றுக்கு முன்னேறியது.
11 minute ago
22 minute ago
30 minute ago
36 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
22 minute ago
30 minute ago
36 minute ago