2026 ஏப்ரல் 01, புதன்கிழமை

அடுத்த போட்டியில் ஸ்டெய்ன் சந்தேகம்

Shanmugan Murugavel   / 2015 நவம்பர் 08 , மு.ப. 06:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்திய, தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியில், தென்னாபிரிக்க அணியின் முதன்மைப் பந்துவீச்சாளர் டேல் ஸ்டெய்ன், பங்குபற்றுகின்றமை சந்தேகத்துக்குரியதாக மாறியுள்ளது.

முதலாவது டெஸ்ட் போட்டியின் போது, அடிவயிற்றுப் பகுதியில் காயமடைந்த அவர், இரண்டாவது இனிங்ஸில் பந்துவீசியிருக்கவில்லை.

இந்நிலையிலேயே, 14ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ள போட்டியில் அவரால் பங்குபற்ற முடியுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இது தொடர்பான முடிவு, வியாழக்கிழமை எடுக்கப்படவுள்ளது.

இரு அணிகளுக்குமிடையிலான முதலாவது போட்டியில், 108 ஓட்டங்களால் இந்திய அணி வெற்றிபெற்றிருந்த நிலையில், தொடரைச் சமப்படுத்துவதற்கான அழுத்தத்தை, தென்னாபிரிக்கா எதிர்கொண்டுள்ளது. எனவே, டேல் ஸ்டெய்னின் இழப்பு, தென்னாபிரிக்காவுக்கு அதிக அழுத்தங்களை வழங்குமென எதிர்பார்க்கப்படுகின்றது.

இதேவேளை, முதலாவது டெஸ்ட் போட்டியில் பங்குபற்றியிருக்காத சிரேஷ்ட வீரர்களான ஜே.பி டுமினி, மோர்னி மோர்க்கல் இருவரும், அடுத்த போட்டியில் பங்குபற்றுவரென எதிர்பார்க்கப்படுகின்றது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .