Shanmugan Murugavel / 2022 டிசெம்பர் 15 , பி.ப. 02:24 - 0 - {{hitsCtrl.values.hits}}

நியூசிலாந்தின் டெஸ்ட் போட்டிகளுக்கான அணித்தலைவர் பொறுப்பிலிருந்து கேன் வில்லியம்ஸன் விலகியுள்ளார்.
இந்நிலையில், வில்லியம்ஸனின் பிரதியீடாக டிம் செளதி பெயுரிடப்பட்டுள்ளார்.
கடந்த 2016ஆம் ஆண்டு அணித்தலைவராக நியமிக்கப்பட்ட வில்லியம்ஸனின் கீழ் 40 போட்டிகளில் 22 போட்டிகளில் நியூசிலாந்து வென்றதுடன், கடந்தாண்டு உலக டெஸ்ட் சம்பியன்களாகவும் முடிசூடியிருந்தது.
இதேவேளை, பாகிஸ்தான் தொடருக்கான நியூசிலாந்துக் குழாமில் இஷ் சோதி, நான்காண்டுகளுக்குப் பின்னர் இடம்பெற்றுள்ளதோடு, பிளையர் டிக்னர், கிளென் பிலிப்ஸ் ஆகியோரும் குழாமில் இடம்பெற்றுள்ளனர். இக்குழாமில் இடம்பெற முடியாதென அறிவித்த ட்ரெண்ட் போல்ட் குழாமில் இடம்பெறவில்லை.
குழாம்: டிம் செளதி (அணித்தலைவர்), மிஷெல் பிறேஸ்வெல், டொம் பிளன்டல் (விக்கெட் காப்பாளர்), டெவோன் கொன்வே, மற் ஹென்றி, டொம் லேதம், டரைல் மிற்செல், ஹென்றி நிக்கொல்ஸ், அஜாஸ் பட்டேல், கிளென் பிலிப்ஸ், இஷ் சோதி, பிளையர் டிக்னர், நீல் வக்னர், கேன் வில்லியம்ஸன், வில் யங்க்.
17 minute ago
47 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
47 minute ago
1 hours ago
2 hours ago