Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை
Shanmugan Murugavel / 2020 நவம்பர் 08 , மு.ப. 04:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்தியாவின் பெண்களின் இருபதுக்கு – 20 சவால் தொடரின் இறுதிப் போட்டிக்கு, இலங்கையணியின் இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டிகளுக்கான அணித்தலைவி சாமரி அத்தப்பத்து மற்றும் ராதா யாதவ்வின் பங்களிபோடு சுப்பர்நோவாஸ் மற்றும் ட்ரையல்பிளேஸர்ஸ் தகுதிபெற்றுள்ளன.
ஐக்கிய அரபு அமீரகத்தின் ஷார்ஜாவில் நேற்று நடைபெற்ற ட்ரையல்பிளேஸர்ஸுடனான போட்டியில் சுப்பர்நோவாஸ் வென்றமையைத் தொடர்ந்தே இறுதிப் போட்டிக்கு இரண்டு அணிகளும் தகுதிபெற்றிருந்தன.
இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய சுப்பர்நோவாஸ், சாமரி அத்தப்பத்துவின் 67 (48), ஹர்மன்பிறீட் கெளரின் 31 (29), பிரியா புனியாவின் 30 (37) ஓட்டங்களுடன் 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 146 ஓட்டங்களைப் பெற்றது.
பதிலுக்கு, 147 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய ட்ரையல்பிளேஸர்ஸ், தீப்தி ஷர்மா ஆட்டமிழக்காமல் 43 (40), ஸ்மிருதி மந்தனா 33 (40), ஹர்லீன் டியோல் 27 (15), தெயேந்திர டோட்டின் 27 (15) ஓட்டங்களைப் பெற்றபோதும், றாதா யாதவ் (2), ஷகெரா செல்மன் (2), அனுஜா பட்டில் (1) கட்டுக்கீப்பாக பந்துவீசி விக்கெட்டுகளைக் கைப்பற்றிய நிலையில் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 144 ஓட்டங்களையே பெற்று இரண்டு ஓட்டங்களால் தோல்வியடைந்தது.
இப்போட்டியின் முதலாவது போட்டியில் வெலோசிற்றியிடம் சுப்பர்நோவாஸ் தோற்றிருந்ததுடன், இரண்டாவது போட்டியில் ட்ரையல்பிளேஸர்ஸிடம் வெலோசிற்றி தோற்றிருந்த நிலையில், நாளை இரவு 7.30 மணிக்கு நடைபெறவுள்ள இறுதிப் போட்டியில் மோதுவதற்கு ஓட்ட விகிதத்தின் அடிப்படையில் ட்ரையல்பிளேஸர்ஸும், சுப்பர்நோவாஸும் தகுதிப்பெற்றிருந்தன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
29 minute ago
1 hours ago