2026 ஏப்ரல் 04, சனிக்கிழமை

அதிக அரசியலால் மே.தீவுகள் கொல்லப்படுகிறது: பிராவோ

Shanmugan Murugavel   / 2015 டிசெம்பர் 17 , பி.ப. 04:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் சபையில் காணப்படும் அதிகபட்ச அரசியல் காரணமாக, அங்குள்ள கிரிக்கெட் கொல்லப்படுவதாக, அவ்வணியின் டுவைன் பிராவோ தெரிவித்துள்ளார்.

சகலதுறை வீரரான டுவைன் பிராவோ, கடந்தாண்டு இந்தியாவில் இடம்பெற்ற தொடரிலிருந்து, ஊதியப் பிரச்சினை தொடர்பாக மேற்கிந்தியத் தீவுகள் அணி விலகும் போது அணித்தலைவராக இருந்து, அதை வழிநடத்தியதைத் தொடர்ந்து, அவ்வணியின் ஒருநாள் சர்வதேசப் போட்டி அணியில் சேர்க்கப்படுவதில்லை. ஆனால், இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டிக் குழாமில், இன்னமும் சேர்க்கப்படுகிறார்.

அவுஸ்திரேலியாவுக்கெதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் அணி ஓர் இனிங்ஸ் மற்றும் 212 ஓட்டங்களால் தோல்வியடைந்தமை, மிகவும் வருத்தம் தரக்கூடியது எனத் தெரிவித்த பிராவோ, உலகின் மிகச்சிறந்த வீரர்களாக வரக்கூடிய வீரர்கள் காணப்படுகின்ற போதிலும், கிரிக்கெட் சபையின் மோசமான நிர்வாகம் காரணமாகவே, மேற்கிந்தியத் தீவுகளின் தரம் குறைவடைந்துள்ளதாகத் தெரிவித்தார்.

காலகட்டமொன்றில், உலகின் முதல்நிலை அணியாக மேற்கிந்தியத் தீவுகள் இருந்த நிலையில், தற்போது இந்நிலையை அடைந்துள்ளமை வருத்தம் தருவதாகத் தெரிவித்த அவர், நிர்வாகத்தில் இருப்பவர்கள், எப்போதுமே கடந்தகாலத்தைப் பற்றிக் கதைத்துக் கொண்டிருந்தால், இந்நிலை தொடர்ந்தும் நீடிக்குமென எச்சரிக்கையும் வழங்கினார்.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .