Shanmugan Murugavel / 2016 நவம்பர் 15 , பி.ப. 01:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிரான்ஸ் தேசிய கால்பந்தாட்ட அணியினதும் ஸ்பெய்ன் கால்பந்தாட்டக் கழகமானஅத்லெட்டிகோ மட்ரிட்டினதும் முன்கள வீரரான அந்தோனி கிறீஸ்மன், எதிர்வரும் சனிக்கிழமை (19) இடம்பெறவுள்ள றியல் மட்ரிட் கழகத்துடனான போட்டியில் விளையாடுவது சந்தேகம் எனக் கூறப்பட்டுள்ளது.
எவ்வாறெனினும், சுவீடன் அணிக்கெதிராக கடந்த வெள்ளிக்கிழமை (11) இடம்பெற்ற போட்டியில் கிறீஸ்மன் காலை முறித்துக் கொள்ளவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்போட்டியில், 2-1 என்ற கோல் கணக்கில் பிரான்ஸ் வெற்றி பெற்றிருந்தது.
தனது இடது காலில் இரத்தக்கட்டியை கிறீஸ்மன் கொண்டுள்ளபோதும், எக்ஸ்ரேயின் பின்னர், எலும்பில் உபாதை இல்லை என அத்லெட்டிகோ மட்ரிட் தெரிவித்துள்ளது.
இப்பருவகால லா லிகா போட்டிகளில் ஆறு கோல்களைப் பெற்றுள்ள கிறீஸ்மன், அத்லெட்டிகோ மட்ரிட் சார்பாக, இப்பருவகால லா லிகா போட்டிகளில் அதிக கோல்களைப் பெற்றுள்ளார்.
26 minute ago
2 hours ago
2 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
2 hours ago
2 hours ago
8 hours ago