Shanmugan Murugavel / 2016 நவம்பர் 22 , பி.ப. 06:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜேர்மனி கால்பந்தாட்ட அணியின் முன்னாள் வீரரும் பயிற்சியாளருமான ஜோர்ஜன் கிளீன்ஸ்மன், ஐக்கிய அமெரிக்ககாவின் பயிற்சியாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
1990ஆம் ஆண்டு உலகக் கிண்ணத்தை வீரராக வென்ற 52 வயதான கிளீன்ஸ்மன், ஐக்கிய அமெரிக்க அணியின் பயிற்சியாளராக 2011ஆம் ஆண்டு பதவியேற்றிருந்தார்.
பிரேஸிலில் 2014ஆம் ஆண்டு இடம்பெற்ற உலகக் கிண்ணத்தில், இறுதிப் 16 அணிகளுக்கான சுற்றுப் போட்டிக்கு ஐக்கிய அமெரிக்காவை கிளீன்ஸ்மன் அழைத்துச் சென்றபோதும், ரஷ்யாவில் 2018ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள உலகக் கிண்ணத்துக்கான முதலிரண்டு தகுதிகாண் போட்டிகளிலும், 2-1 என்ற கோல் கணக்கில் மெக்ஸிக்கோவிடமும், 4-0 என்ற கோல் கணக்கில் கொஸ்டா றிக்காவிடமும் ஐக்கிய அமெரிக்க அணி தோல்வியடைந்திருந்தது.
5 hours ago
7 hours ago
8 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
7 hours ago
8 hours ago
9 hours ago