Editorial / 2018 ஓகஸ்ட் 21 , மு.ப. 04:47 - 0 - {{hitsCtrl.values.hits}}

அயர்லாந்து, ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டித் தொடரில், பிரடியில் நேற்று இடம்பெற்ற முதலாவது போட்டியில் ஆப்கானிஸ்தான் வென்றது.
மழை காரணமாக 18 ஓவர்களாகக் குறைக்கப்பட்ட இப்போட்டியில் துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான், 18 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 160 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில், ஹஸரத்துல்லா ஸஸாய் 74 (33), அணித்தலைவர் அஸ்கர் ஆப்கான் 31 (30), மொஹமட் ஷஷாட் 29 (21) ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், ஜோஷுவா லிட்டில், டைரோன் கேன் ஆகியோர் தலா 2, பீற்றர் சேஸ், சிமி சிங் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.
பதிலுக்கு, 161 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய அயர்லாந்து, 18 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 144 ஓட்டங்களைப் பெற்று16 ஓட்டங்களால் தோல்வியடைந்தது. துடுப்பாட்டத்தில், கரி வில்சன் 34 (24), போல் ஸ்டேர்லிங் 27 (19), ஜோர்ஜ் டொக்கரல் ஆட்டமிழக்காமல் 22 (13), சிமி சிங் 20 (17) ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், ரஷீட் கான் 3, முஜீப் உர் ரஹ்மான், அவ்தாப் அலம் ஆகியோர் தலா 2, பரீட் அஹ்மட், மொஹமட் நபி ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டை வீழ்த்தினர்.
16 minute ago
46 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
46 minute ago
1 hours ago
2 hours ago