2026 ஏப்ரல் 04, சனிக்கிழமை

அயர்லாந்தை வென்றது இலங்கை

Shanmugan Murugavel   / 2016 ஜூன் 16 , பி.ப. 06:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

அயர்லாந்து, இலங்கை அணிகளுக்கிடையிலான இரண்டு, ஒருநாள் சர்வதேசப் போட்டிகள் கொண்ட தொடரின் முதலாவது போட்டியில் இலகுவாக இலங்கையணி வெற்றி பெற்றுக்கொண்டுள்ளது.

டப்பிளினில் இடம்பெற்ற மேற்படி போட்டியில், நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற அயர்லாந்து அணியின் தலைவர் வில்லியம் போர்ட்பீல்ட், தமது அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடும் என அறிவித்தார்.

அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கையணி, 50 ஓவர்கள் முடிவில் ஏழு விக்கெட்டுகளை இழந்து 3௦3 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில் இலங்கையணி சார்பாக, தினேஷ் சந்திமால் ஆட்டமிழக்காமல் 100 ஓட்டங்களையும் ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் அறிமுகத்தை மேற்கொண்ட குஷால் மென்டிஸ் 51 ஓட்டங்களையும் அணித்தலைவர் அஞ்சலோ மத்தியூஸ்  44 ஓட்டங்களையும் ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் அறிமுகத்தை மேற்கொண்ட தசுன் சானக, 3, ஆறு ஓட்டங்கள், 5, நான்கு ஓட்டங்கள் உள்ளடங்கலாக 19 பந்துகளில் 42 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் அயர்லாந்து அணி சார்பாக, போயிட் ராங்கின், ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் அறிமுகத்தை மேற்கொண்ட பரி மக்கிறாத்தி ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளையும் கெவின் ஓ பிரையன், டிம் மேர்ட்டாக்,  மக்ஸ் சொறேன்சன் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

பதிலுக்கு, 304 என்ற வெற்றியிலக்குடன் களமிறங்கிய அயர்லாந்து அணி, 32.3 ஓவர்களில் நான்கு விக்கெட்டுகளை இழந்து 164 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது மழை குறுக்க்கிட்டதால், டக்வேர்த்-லூயிஸ் முறைப்படி, அயர்லாந்து அணிக்கு மூன்று ஓவர்கள் குறைக்கப்பட்டு 293 ஓட்டங்கள் வெற்றியிலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

எனினும் அயர்லாந்து அணி, 40.4 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 216 ஓட்டங்களை மாத்திரமே பெற்று 76 ஓட்டங்களினால் தோல்வியடைந்தது. அவ்வணி சார்பாக, துடுப்பாட்டத்தில், வில்லியம் போர்ட்பீல்ட் 73 ஓட்டங்களையும் கெவின் ஓ பிரையன் 64 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் இலங்கையணி சார்பாக, தசுன் சானக ஐந்து விக்கெட்டுகளையும் அஞ்சலோ மத்தியூஸ் இரண்டு விக்கெட்டுகளையும் ஷமின்ட எரங்க, நுவான் பிரதீப், சீக்குகே பிரசன்னா ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .