Editorial / 2018 ஒக்டோபர் 25 , மு.ப. 06:02 - 0 - {{hitsCtrl.values.hits}}

பாகிஸ்தான், அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டியில், அபுதாபியில் நேற்று இடம்பெற்ற முதலாவது இலகுவாக அவுஸ்திரேலியாவை பாகிஸ்தான் வீழ்த்தியது.
இப்போட்டியில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட பாகிஸ்தான், 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 155 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில், பாபர் அஸாம் ஆட்டமிழக்காமல் 68 (55), மொஹமட் ஹபீஸ் 39 (30) ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், பில்லி ஸ்டான்லேக், அன்ரூ டை ஆகியோர் தலா 3, டார்சி ஷோர்ட், அடம் ஸாம்பா ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.
பதிலுக்கு, 156 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி, 16.5 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 89 ஓட்டங்களைப் பெற்று 66 ஓட்டங்களால் தோல்வியடைந்தது. துடுப்பாட்டத்தில், நேதன் கூல்டர்நைல் 34 (29) ஓட்டங்களைப் பெற்றார். பந்துவீச்சில், இமாட் வசீம் 3, பாஹீம் அஷ்ரப், ஷகீன் ஷா அப்ரிடி ஆகியோர் தலா 2, ஷடாப் கான், ஹஸன் அலி ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.
இப்போட்டியின் நாயகனாக இமாட் வசீம் தெரிவானார்.
3 hours ago
3 hours ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
4 hours ago
4 hours ago