2026 ஏப்ரல் 01, புதன்கிழமை

அவுஸ்திரேலியாவுக்கு 208 ஓட்ட வெற்றி

Shanmugan Murugavel   / 2015 நவம்பர் 09 , மு.ப. 02:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

அவுஸ்திரேலிய, நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டியில், அவுஸ்திரேலிய அணிக்கு 208 ஓட்டங்களால் வெற்றி கிடைத்துள்ளது.

பிறிஸ்பேணில் இடம்பெற்ற இப்போட்டியில், 3 விக்கெட்டுகளை இழந்து 142 ஓட்டங்களுடன் 5ஆவது நாளை ஆரம்பித்த நியூசிலாந்து அணி, 295 ஓட்டங்களுக்குச் சகல விக்கெட்டுகளையும் இழந்தது. ஒரு கட்டத்தில் 5 விக்கெட்டுகளை இழந்து 242 ஓட்டங்களுடன் காணப்பட்ட அவ்வணி, 53 ஓட்டங்களுக்கு இறுதி 5 விக்கெட்டுகளையும் இழந்தது.

துடுப்பாட்டத்தில் பிரென்டன் மக்கலம் 80, கேன் வில்லியம்ஸன் 59 ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில் நேதன் லையன் 3, மிற்சல் ஸ்டார்க், ஜொஸ் ஹேஸல்வூட், மிற்சல் மார்ஷ் மூவரும் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி, உஸ்மான் கவாஜாவின் 174, டேவிட் வோணரின் 163, அடம் வோஜஸின் ஆட்டமிழக்காத 83, ஜோ பேர்ண்ஸின் 71 ஓட்டங்களின் துணையோடு 4 விக்கெட்டுகளை இழந்து 556 ஓட்டங்களைப் பெற்றது.

நியூசிலாந்தின் கேன் வில்லியம்ஸன் 140 ஓட்டங்களைப் பெற்ற போதிலும் அவ்வணி, தனது இனிங்ஸில் 317 ஓட்டங்களையே பெற்றது. அவுஸ்திரேலி அணி தனது 2ஆவது இனிங்ஸில், ஜோ பேர்ண்ஸ், டேவிட் வோணரின் சதங்களின் உதவியோடு 4 விக்கெட்டுகளை இழந்து 264 ஓட்டங்களைப் பெற்று, 504 ஓட்டங்களை இலக்காக வழங்கியிருந்தது.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .