Shanmugan Murugavel / 2015 நவம்பர் 08 , மு.ப. 08:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு, மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுவரும் நியூசிலாந்து அணி, பிரிஸ்பேர்ணில் இடம்பெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியில் தடுமாறி வருகிறது.
நாளைய இறுதி ஐந்தாவது நாளில் 504 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடி வரும் நியூசிலாந்து அணியின், வெற்றிக்கு இன்னும் 362 ஓட்டங்கள் தேவையான நிலையில், அவுஸ்திரேலியாவின் வெற்றிக்கு ஏழு விக்கெட்டுக்கள் தேவைப்படுகின்றது.
தமது இரண்டாவது இனிங்ஸில் 3 விக்கெட்டுக்களை இழந்து 142 ஓட்டங்களைப் பெற்றுள்ள நியூசிலாந்து அணி சார்பில், ரோஸ் டெய்லர் 20, அணித்தலைவர் பிரண்டன் மக்குலம் 4 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளனர். முன்னதாக கேன் வில்லியம்ஸன் 59 ஓட்டங்களுடன் சர்ச்சைக்குரிய எல்பிடபில்யு முறையில் ஆட்டமிழந்தார். பந்துவீச்சில் அவுஸ்திரேலிய அணி சார்பாக நதன் லயன் 2 விக்கெட்டுக்களையும் மிட்செல் ஸ்டார்க் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
இன்றைய, நான்காம் நாள் ஆட்டத்தில் மழை குறுக்கீடுகள் காரணமாக ஆட்டம் 53 ஓவர்கள் மாத்திரமே இடம்பெற்றிருந்தது. இன்றைய நாள் ஆட்டத்திலும் மழை பெய்யும் எனக் கூறப்பட்டபோதும் போட்டியை பாதிக்கக் கூடிய வகையில் அது இருக்காது எனப்படுகிறது.
முன்னதாக தமது இரண்டாவது இனிங்சில் 4 விக்கெட் இழப்புக்கு 264 ஓட்டங்களை பெற்றிருந்தபோது தமது இனிங்ஸை இடைநிறுத்தியிருந்தது. இதில் ஜோ பேர்ன்ஸ் தனது கன்னிச் சதமாக 129 ஓட்டங்களையும் முதல் இனிங்ஸில் சதம் பெற்ற டேவிட் வோணர், இந்த இனிங்ஸிலும் 116 ஓட்டங்களைப் பெற்று, மூன்று தடவைகள், ஒரு போட்டியில் இரு இனிங்ஸிலும் சதம் பெற்று ரிக்கி பொன்டிங், சுனில் கவாஸ்கர் பட்டியலில் இணைந்தார்.
அவுஸ்திரேலிய அணி , தமது முதல் இனிங்ஸில் காவஜாவின் 174, வோணரின் 163 ஓட்டங்கள் உள்ளடங்கலாக 4 விக்கெட் இழப்புக்கு 556 ஓட்டங்களை குவித்ததோடு, நியூசிலாந்து அணி, தமது முதல் இனிங்ஸில் வில்லியம்ஸனின் 140 ஓட்டங்கள் உள்ளடங்கலாக 317 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.
7 minute ago
33 minute ago
43 minute ago
46 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
33 minute ago
43 minute ago
46 minute ago