2026 ஏப்ரல் 04, சனிக்கிழமை

ஆசி - மே.தீவுகள்: நான்காவது நாளும் கைவிடப்பட்டது

Shanmugan Murugavel   / 2016 ஜனவரி 06 , மு.ப. 03:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

அவுஸ்திரேலிய, மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கிடையிலான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் 3ஆவது போட்டியின் 4ஆவது நாள் ஆட்டமும் இன்று கைவிடப்பட்டது.

ஏற்கெனவே, மழை காரணமாக முதலாவது நாளில் 75 ஓவர்களும் 2ஆவது நாளில் 11.2 ஓவர்களும் மாத்திரமே வீசப்பட்டன. மூன்றாவது நாள் ஆட்டம் கைவிடப்பட்டிருந்தது. இந்நிலையிலேயே, நான்காவது நாள் ஆட்டமும் இன்று கைவிடப்பட்டது.

மேற்கிந்தியத் தீவுகள் அணி தனது முதல் இனிங்ஸில், 7 விக்கெட்டுகளை இழந்து 248 ஓட்டங்களுடன் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .