2026 மார்ச் 28, சனிக்கிழமை

ஆறு ஓட்டங்களுடன் ஐ.பி.எல்லை ஆரம்பித்த 14 வயதான சூரியவன்ஷி

Shanmugan Murugavel   / 2025 ஏப்ரல் 20 , பி.ப. 01:08 - 0     - {{hitsCtrl.values.hits}}


இந்தியன் பிறீமியர் லீக்கில் (ஐ.பி.எல்) அறிமுகத்தை மேற்கொண்ட மிக இளவயது வீரரான ராஜஸ்தான் றோயல்ஸின் 14 வயதான வைபவ் சூரியவன்ஷி, லக்னோ சுப்பர் ஜையன்ட்ஸுக்கெதிரான சனிக்கிழமை (19)  போட்டியின் தனது இனிங்ஸை ஆறு ஓட்டங்களுடன் ஆரம்பித்திருந்தார்.

ராஜஸ்தானின் அணித்தலைவர் சஞ்சு சாம்சனின் காயம் காரணமாக அணியில் இடம்பெற்ற சூரியவன்ஷி, 20 பந்துகளில் 3 ஆறு ஓட்டங்கள், 2 நான்கு ஓட்டங்கள் உள்ளடங்கலாக 34 ஓட்டங்களைப் பெற்றிருந்தார்.

இதற்கு முன்னர் ஐ.பி.எல்லில் 2019ஆம் ஆண்டு றோயல் சலஞ்சர்ஸ் பெங்களூருக்காக சுழற்பந்துவீச்சாளர் பிரயாஸ் றை புர்மன் 16 வயதில் அறிமுகத்தை மேற்கொண்டமையே இள வயது அறிமுகமாகக் காணப்பட்டிருந்தது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .