Shanmugan Murugavel / 2025 ஒக்டோபர் 27 , பி.ப. 06:58 - 0 - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்துக்கெதிரான முதலாவது ஆஷஸ் டெஸ்டுக்கு அவுஸ்திரேலியாவின் அணித்தலைவர் பற் கமின்ஸ் உடற்றகுதியைப் பெற மாட்டார் எனவும் அணித்தலைவராக ஸ்டீவ் ஸ்மித்தால் பிரதியிடப்படுவாரென கிரிக்கெட் அவுஸ்திரேலியா திங்கட்கிழமை (27) தெரிவித்துள்ளது.
கமின்ஸ் மீள ஓட ஆரம்பித்துள்ளதாகத் தெரிவித்த அவுஸ்திரேலியாவின் பயிற்சியாளர் அன்றூ மக்டொனால்ட், இவ்வார பந்துவீசுவதற்கு திரும்புவாவாரென்றும் இரண்டாவது டெஸ்டுக்கு திரும்புவாரென நம்புவதாகக் கூறியுள்ளார்.
இந்நிலையில் அணியில் கமின்ஸை ஸ்கொட் போலண்ட் பிரதியிடுவாரென எதிர்பார்க்கப்படுகிறது.
இதுதவிர மிற்செல் மாஷை டெஸ்டுக்கு மீள அழைப்பது குறித்து தேர்வாளர்கள் கருத்திற் கொள்வரென மக்டொனால்ட் குறிப்பிட்டுள்ளார்.
2 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago