Shanmugan Murugavel / 2025 டிசெம்பர் 17 , பி.ப. 02:20 - 0 - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்துக்கெதிரான மூன்றாவது டெஸ்டின் முதலாம் நாள் முடிவில் அவுஸ்திரேலியா முன்னிலையில் காணப்படுகின்றது.
ஐந்து போட்டிகள் கொண்ட இத்தொடரின் முதலிரண்டு போட்டிகளிலும் அவுஸ்திரேலியா வென்ற நிலையில், அடிலெய்ட்டில் புதன்கிழமை (17) ஆரம்பமான இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற அவுஸ்திரேலிய அணித்தலைவர் பற் கமின்ஸ் தமதணி முதலில் துடுப்பெடுத்தாடுமென அறிவித்தார்.
கடந்த போட்டியில் அவுஸ்திரேலியா சார்பாக விளையாடிய ஸ்டீவன் ஸ்மித், மைக்கல் நேஸர், பிரெண்டன் டொக்கெட்டை உஸ்மான் கவாஜா, கமின்ஸ், நேதன் லையன் ஆகியோர் பிரதியிட்டனர். இங்கிலாந்து சார்பாக கடந்த போட்டியில் விளையாடிய குஸ் அட்கின்ஸனை ஜொஷ் டொங் பிரதியிட்டிருந்தார்.
அந்தவகையில் முதலில் துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய அவுஸ்திரேலியா ஆரம்பத்திலேயே ஜொஃப்ரா ஆர்ச்சர், பிறைடன் காஸிடம் ஜேக் வெதெரல்ட், ட்ரெவிஸ் ஹெட்டை இழந்தது. பின்னர் மர்னுஸ் லபுஷைன், கமரன் கிறீன் ஆகியோர் ஆர்ச்சரிடம் வீழ்ந்தனர்.
பின்னர் ஜோடி சேர்ந்த கவாஜா, அலெக்ஸ் காரி இனிங்ஸைக் கட்டியெழுப்பிய நிலையில் 82 ஓட்டங்களுடன் வில் ஜக்ஸிடம் கவாஜா வீழ்ந்தார். அடுத்து வந்த ஜொஸ் இங்லிஸுடன் காரி இனிங்ஸை நகர்த்திய நிலையில் 32 ஓட்டங்களுடன் டொங்கிடம் இங்கிலிஸ் வீழ்ந்தார். தொடர்ந்து வந்த கமின்ஸும் சிறிது நேரத்திலேயே காஸிடம் வீழ்ந்தார்.
இந்நிலையில் இறுதியாக 106 ஓட்டங்களுடன் ஜக்ஸிடம் காரி விழ முதலாம் நாள் முடிவில் தமது முதலாவது இனிங்ஸில் 8 விக்கெட்டுகளை இழந்து 326 ஓட்டங்களை அவுஸ்திரேலியா பெற்றுள்ளது. களத்தில் 33 ஓட்டங்களுடனும் மிற்செல் ஸ்டார்க்கும், ஓட்டமெதுவும் பெறாமல் நேதன் லையனும் ஆட்டமிழக்காமலுள்ளனர்.
1 hours ago
2 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago
3 hours ago