Shanmugan Murugavel / 2026 மே 14 , மு.ப. 11:50 - 0 - {{hitsCtrl.values.hits}}

நியூசிலாந்துக்கெதிரான முதலாவது டெஸ்டுக்கான இங்கிலாந்துக் குழாமில் வேகப்பந்துவீச்சாளர் ஒலி றொபின்சன் இடம்பெற்றுள்ளார். இரண்டாண்டுகளுக்குப் பின்னர் குழாமுக்கு றொபின்சன் அழைக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை ஆரம்பத் துடுப்பாட்டவீரர் ஸக் குறோலி, மூன்றாமிலக்கத் துடுப்பாட்டவீரர் ஒலி போப் ஆகியோர் குழாமில் இடம்பெறாத நிலையில் புதுமுக ஆரம்பத் துடுப்பாட்டவீரர் எமிலியோ கே குழாமில் இடம்பிடித்ததுடன், மேலதிக துடுப்பாட்டவீரராக இன்னொரு புதுமுகவீரராக ஜேம்ஸ் றியூ இடம்பெற்றுள்ளார்.
இந்தியன் பிறீமியர் லீக்கில் பங்கேற்றுள்ளமை காரணமாக ஜொஃப்ரா ஆர்ச்சர் குழாமில் இடம்பெறாத நிலையில், சுழற்பந்துவீச்சாளர் றெஹான் அஹ்மட், டெஸ்ட் போட்டிகளில் இன்னும் அறிமுகத்தை மேற்கொள்ளாத வேகப்பந்துவீச்சாளரான சொனி பேக்கர் மற்றும் மற் பிஷர் ஆகியோரும் குழாமில் இடம்பெற்றுள்ளனர்.
காயம் காரணமாக மார்க் வூட், பிறைடன் கார்ஸ் ஆகியோர் குழாமில் இடம்பெறவில்லை.
குழாம்: பென் ஸ்டோக்ஸ் (அணித்தலைவர்), றெஹான் அஹ்மட், குஸ் அட்கின்ஸன், சொனி பேக்கர், ஷொய்ப் பஷிர், ஜேக்கப் பெத்தெல், ஹரி ப்றூக், பென் டக்கெட், மத்தியூ பிஷர், எமிலியோ கே, ஜேம்ஸ் றியூ, ஒலி றொபின்சன், ஜோ றூட், ஜேமி ஸ்மித், ஜொஸ் டொங்க்.
6 minute ago
19 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
19 minute ago
2 hours ago