Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 28, சனிக்கிழமை
Shanmugan Murugavel / 2021 ஜூன் 07 , மு.ப. 06:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட்டானது வெற்றி தோல்வியின்றி முடிவடைந்துள்ளது.
லோர்ட்ஸில் கடந்த புதன்கிழமை ஆரம்பித்த இரண்டு போட்டிகள் கொண்ட இத்தொடரின் முதலாவது போட்டியின் நேற்றைய ஐந்தாம் நாளை, தமது இரண்டாவது இனிங்ஸில் 2 விக்கெட்டுகளை இழந்து 62 ஓட்டங்களைப் பெற்றவாறு நியூசிலாந்து ஆரம்பித்திருந்தது.
இந்நிலையில், குறிப்பிட்ட இடைவெளிகளில் ஒலி றொபின்ஸன், ஸ்டூவர்ட் ப்ரோட், மார்க் வூட், அணித்தலைவர் ஜோ றூட்டிடம் விக்கெட்டுகளை பறிகொடுத்த நியூசிலாந்து, 6 விக்கெட்டுகளை இழந்து 169 ஓட்டங்களைப் பெற்றபோது தமது இனிங்ஸை இடைநிறுத்தியது. துடுப்பாட்டத்தில், டொம் லேதம் 36, றொஸ் டெய்லர் 33, ஹென்றி நிக்கொல்ஸ் 23, பி.ஜெ. வட்லிங்க் ஆட்டமிழக்காமல் 15 ஓட்டங்களைப் பெற்றனர்.
பதிலுக்கு, 273 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து றோறி பேர்ண்ஸ், டொம் சிப்லி மூலம் நிதானமான ஆரம்பத்தைப் பெற்றது. பின்னர் பேர்ண்ஸ், அடுத்து வந்த ஸக் க்றொலியை நீல் வக்னர், டிம் செளதியிடம் அடுத்தடுத்து இழந்தது.
பின்னர் சிப்லி, றூட்டின் இணைப்பாட்டத்தின் மூலம் நிதானமாக இனிங்ஸைக் கையாண்ட இங்கிலாந்து, வக்னரிடம் 40 ஓட்டங்களுடன் றூட் ஆட்டமிழந்தபோதும், சிப்லியின் ஆட்டமிழக்காத 60, ஒலி போப்பின் ஆட்டமிழக்காத 20 ஓட்டங்களுடன் போட்டியை வெற்றி தோல்வியின்றி முடித்துக் கொண்டது.
இப்போட்டியின் நாயகனாக டெவோன் கொன்வே தெரிவானார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
58 minute ago
1 hours ago
4 hours ago