Shanmugan Murugavel / 2022 பெப்ரவரி 09 , பி.ப. 10:02 - 0 - {{hitsCtrl.values.hits}}

மேற்கிந்தியத் தீவுகளுக்கான சுற்றுப்பயணத்துக்கான குழாமிலிருந்து இங்கிலாந்தின் சிரேஷ்ட வேகப்பந்துவீச்சாளர்களான ஜேம்ஸ் அன்டர்சன், ஸ்டூவர்ட் ப்ரோட் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், இக்குழாமில் டெஸ்ட் போட்டிகளில் அறிமுகத்தை மேற்கொண்டிருக்காத சஹிப் மஹ்மூட், இங்கிலாந்து அறிமுகத்தை மேற்கொண்டிருக்காத மத்தியூ பிஷர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
இதேவேளை, ஜொஸ் பட்லர், றோறி பேர்ண்ஸ், ஹசீப் ஹமீட், டேவிட் மலான் ஆகியோரும் குழாமிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
இது தவிர, விக்கெட் காப்பாளர் பென் ஃபோக்ஸ் மீண்டும் குழாமுக்கு அழைக்கப்பட்டதுடன், ஆரம்பத் துடுப்பாட்டவீரர் அலெக்ஸ் லீஸும் முதற்தடவையாக குழாமில் இடம்பெற்றுள்ளார்.
இந்நிலையில், சுழற்பந்துவீச்சாளர் மற் பார்க்கின்ஸனும் குழாமுக்கு மீண்டும் அழைக்கப்பட்டுள்ளார்.
குழாம்: ஸக் குறொலி, அலெக்ஸ் லீஸ், ஜோ றூட் (அணித்தலைவர்), ஜொனி பெயார்ஸ்டோ, டான் லோரன்ஸ், பென் ஸ்டோக்ஸ், ஒலி போப், பென் ஃபோக்ஸ் (விக்கெட் காப்பாளர்), கிறிஸ் வோக்ஸ், ஒலி றொபின்ஸன், கிரேய்க் ஒவெர்ட்டன், சஹிப் மஹ்மூட், மார்க் வூட், மத்தியூ பார்க்கின்ஸன், மத்தியூ பிஷர், ஜேக் லீச்
12 minute ago
23 minute ago
31 minute ago
37 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
23 minute ago
31 minute ago
37 minute ago