2026 பெப்ரவரி 24, செவ்வாய்க்கிழமை

இங்கிலாந்து பிறீமியர் லீக்: சமநிலையில் செல்சி – பேண்லி போட்டி

Shanmugan Murugavel   / 2026 பெப்ரவரி 23 , மு.ப. 07:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து பிறீமியர் லீக் தொடரில், தமது மைதானத்தில் சனிக்கிழமை (21) நடைபெற்ற பேண்லியுடனான போட்டியை 1-1 என்ற கோல் கணக்கில் செல்சி சமப்படுத்தியது.

செல்சி சார்பாகப் பெறப்பட்ட கோலை ஜோவா பெட்ரோ பெற்றதோடு, பேண்லி சார்பாகப் பெறப்பட்ட கோலை ஸியான் பிளெமிங் பெற்றிருந்தார்.

இதேவேளை தமது மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை (22) நடைபெற்ற நியூகாசில் யுனைட்டெட்டுடனான போட்டியை 2-1 என்ற கோல் கணக்கில் மன்செஸ்டர் சிற்றி வென்றது. சிற்றி சார்பாகப் பெறப்பட்ட இரண்டு கோல்களையும் நிகோ ஓ ரெய்ல்லி பெற்றதோடு, நியூகாசில் சார்பாகப் பெறப்பட்ட கோலை லூயிஸ் ஹோல் பெற்றிருந்தார்.

இந்நிலையில் அஸ்தன் வில்லாவின் மைதானத்தில் சனிக்கிழமை (21) நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியை 1-1 என்ற கோல் கணக்கில் லீட்ஸ் யுனைட்டெட் சமப்படுத்தியது.

பிறீமியர் லீக் புள்ளிகள் பட்டியலில் 58 புள்ளிகளுடன் முதலாமிடத்தில் ஆர்சனல் காணப்படுகின்றது. 56 புள்ளிகளுடன் இரண்டாமிடத்தில் மன்செஸ்டர் சிற்றியும், 51 புள்ளிகளுடன் மூன்றாமிடத்தில் அஸ்தன் வில்லாவும் காணப்படுகின்றன. தலா 45 புள்ளிகளுடன் செல்சியும், மன்செஸ்டர் யுனைட்டெட்டும் காணப்படுகின்றபோதும் கோலெண்ணிக்கை வித்தியாசத்தில் நான்காம், ஐந்தாமிடங்களில் முறையே காணப்படுகின்றன. இதில் மற்றைய அணிகளை விட யுனைட்டெட் ஒரு போட்டி குறைவாக விளையாடியுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .