2026 ஏப்ரல் 04, சனிக்கிழமை

இங்கிலாந்து - தென்னாபிரிக்கா: 2 போட்டிகளில் பிலாந்தர் இல்லை

Shanmugan Murugavel   / 2015 டிசெம்பர் 10 , மு.ப. 06:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து, தென்னாபிரிக்க அணிகளுக்கிடையில், இம்மாதம் 26ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ள 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதலிரண்டு போட்டிகளிலும், தென்னாபிரிக்காவின் வேர்ணன் பிலாந்தர் பங்குபற்ற முடியாது அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் இடம்பெற்ற டெஸ்ட் தொடரில், பயிற்சியின்போது காயமடைந்த வேர்ணன் பிலாந்தர், அதிலிருந்து மீண்டுவரும் நிலையிலேயே, இரண்டு போட்டிகளில் அவரால் பங்குபற்றமுடியாது என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அத்தோடு, மூன்றாவது போட்டியில் பங்குபற்றுவதும், சந்தேகமானதே என அறிவிக்கப்படுகிறது.

மறுபுறத்தில், அதே தொடரில் உபாதைக்குள்ளான டேல் ஸ்டெய்ன், தொடர்ந்தும் குணமடைந்து வரும் நிலையில், இங்கிலாந்துக்கெதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் பங்குபற்றுவது குறித்த சந்தேகங்கள் காணப்படுகின்றன.
ஆனால், ஜனவரி 2ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ள இரண்டாவது டெஸ்ட் போட்டியில், அவரால் நிச்சயமாகப் பங்குபற்றமுடியுமென அறிவிக்கப்படுகிறது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .