Shanmugan Murugavel / 2015 டிசெம்பர் 01 , மு.ப. 12:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
இங்கிலாந்து, பாகிஸ்தான் அணிகளுக்கிடையில் ஷாஜாவில் இடம்பெற்ற மூன்றாவது இருபது-20 சர்வதேசப் போட்டியில் சுப்பர் ஓவரில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி, தொடரை 3-0 என்ற ரீதியில் கைப்பற்றியது.
நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி, 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுக்களை இழந்து 154 ஓட்டங்களைப் பெற்றது. அவ்வணி சார்பாக துடுப்பாட்டத்தில் ஜேம்ஸ் வின்ஸ், 3, நான்கு ஓட்டங்கள், ஒரு ஆறு ஓட்டங்கள் உள்ளடங்கலாக 45 பந்துகளில் 46 ஓட்டங்களையும், கிறிஸ் வோக்ஸ், ஒரு நான்கு ஓட்டம், 3 ஆறு ஓட்டங்கள் உள்ளடங்கலாக 24 பந்துகளில் 37 ஓட்டங்களையும் பெற்றார்.
பந்துவீச்சில் பாகிஸ்தான் அணி சார்பாக ஷாகித் அப்ரிடி, சொஹைல் தன்வீர் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுக்களையும், அமீர் யமின், ஷோய்ப் மலிக், அன்வர் அலி தலா ஒவ்வொரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.
பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணியும் 20 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்து 154 ஓட்டங்களையே பெற்றது. இதில், துடுப்பாட்டத்தில் அவ்வணி சார்பாக, ஷோய்ப் மலிக், 8, நான்கு ஓட்டங்கள், 2 ஆறு ஓட்டங்கள் உள்ளடங்கலாக 54 பந்துகளில் 75 ஓட்டங்களையும், ஷாகித் அப்ரிடி 3, ஆறு ஓட்டங்கள் உள்ளடங்கலாக 20 பந்துகளில் 29 ஓட்டங்களைப் பெற்றார்.
பந்துவீச்சில் இங்கிலாந்து அணி சார்பாக டேவிட் வில்லி 3 விக்கெட்டுக்களையும், கிறிஸ் வோக்ஸ், அடில் ரஷீத், மொயின் அலி ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டினை கைப்பற்றினர்.
இதனையடுத்து வெற்றி பெறும் அணியை தீர்மானிக்கும் சுப்பர் ஓவரில் பாகிஸ்தான் அணி சார்பாக ஷாகித் அப்ரிடி, உமர் அக்மல் களமிறங்கினர். இங்கிலாந்து சார்பாக ஜோர்டான் பந்துவீசியிருந்த நிலையில், பாகிஸ்தான் அணியால் ஒரு விக்கெட்டை இழந்து மூன்று ஓட்டங்களை மாத்திரமே பெற முடிந்தது.
தொடர்ந்து பாகிஸ்தான் அணி சார்பாக அப்ரிடி பந்துவீச, இங்கிலாந்து அணி சார்பாக ஒயின் மோர்கனும், ஜோஸ் பட்லரும் களமிறங்கி ஒரு பந்து மீதமிருக்கையில் வெற்றியிலக்கை அடைந்தனர்.
இந்தப் போட்டியின் நாயகனாக ஷோய்ப் மலிக் தெரிவானதோடு, தொடரின் நாயகனாக ஜேம்ஸ் வின்ஸ் தெரிவானார்.
4 hours ago
4 hours ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
4 hours ago
5 hours ago