Shanmugan Murugavel / 2016 ஜூன் 03 , மு.ப. 07:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
இங்கிலாந்து பெண்கள் கிரிக்கெட் அணியின் மூன்று வகையான போட்டிகளுக்குமான தலைவியாக ஹீதர் நைட்டை, இங்கிலாந்து கிரிக்கெட் சபை நியமித்துள்ளது. கடந்த மே மாதம், சர்வதேசப் போட்டிகளிலிருந்து ஓய்வை அறிவித்த சார்லோட் எட்வேர்ட்ஸையே நைட் பிறையீடு செய்யவுள்ளார்.
எதிர்வரும் 20ஆம் திகதி, பாகிஸ்தான் அணிக்கெதிராக ஆரம்பிக்கவுள்ள ஒருநாள் சர்வதேசப் போட்டி, இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டித் தொடரே, இங்கிலாந்து அணியின் தலைவியாக, நைட்டின் முதலாவது தொடராக அமையவுள்ளது.
2010ஆம் ஆண்டு சர்வதேச அறிமுகத்தை மேற்கொண்ட வலதுகைத் துடுப்பாட்டவீரரான நைட், சுழற்பந்துவீச்சையும் மேற்கொள்ளக் கூடியவருமாவார். இதுவரையில், ஐந்து டெஸ்ட் போட்டிகளிலும் 55, ஒருநாள் சர்வதேசப் போட்டிகளிலும் 33, இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டிகளிலும் விளையாடியுள்ளதோடு, 2014ஆம் ஆண்டிலிருந்து, மார்ச்-ஏப்ரலில் நடைபெற்ற உலக இருபதுக்கு-20 வரை எட்வேர்ட்ஸின் உப அணித் தலைவியுமாக இருந்துள்ளார்.
4 hours ago
4 hours ago
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
5 hours ago
5 hours ago