Shanmugan Murugavel / 2016 நவம்பர் 27 , பி.ப. 10:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையே இடம்பெற்றுவரும் பிறீமியர் லீக் தொடரில், நேற்று ஞாயிற்றுக்கிழமை (27) இடம்பெற்ற போட்டியொன்றில் ஆர்சனல் வெற்றி பெற்றுள்ளதுடன், மன்செஸ்டர் யுனைட்டெட், வெஸ்ட் ஹாம் ஆகிய அணிகளுக்கிடையிலான போட்டி சமநிலையில் முடிவடைந்தது.
ஆர்சனல், 3-1 என்ற கோல் கணக்கில் போர்ண்மெத்தைத் தோற்கடித்து, தனது தொடர்ச்சியான மூன்று சமநிலை முடிவுகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து வெற்றிப்பாதைக்குத் திரும்பியது.
போட்டியின் 12ஆவது நிமிடத்தில் கோலொன்றைப் பெற்ற அலெக்சிஸ் சந்தேஸ், ஆர்சனலுக்கு முன்னிலையை வழங்கினார். எனினும், நாச்சோ மொன்றியல் செய்த தவறையடுத்து வழங்கப்பட்ட பெனால்டியை போர்ண்மெத் கோலாக்க கோல் எண்ணிக்கை சமநிலையானது.
பின்னர் இரண்டாவது பாதியின் 53ஆவது நிமிடத்தில், மொன்றியலிடமிருந்து பந்தைப் பெற்ற தியோ வோல்கொட் தலையால் முட்டி கோலைப் பெற, 2-1 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்ற ஆர்சனல், போட்டியின் இறுதி நிமிடத்தில் ஒலிவர் ஜிரோட்டிடமிருந்து பந்தைப் பெற்ற அலெக்சிஸ் சந்தேஸ் பெற்ற கோலின் மூலம் வெற்றியை உறுதிப்படுத்தியது.
மன்செஸ்டர் யுனைட்டெட், வெஸ்ட் ஹாம் யுனைட்டெட் ஆகிய அணிகளுக்கிடையிலான போட்டியில் இரண்டு அணிகளும் தலா ஒவ்வொரு கோலைப் பெற்ற நிலையில் போட்டி சமநிலையில் முடிவடைந்தது. போட்டியின் இரண்டாவது நிமிடத்திலேயே, டிமித்ரி பயேட்டின் “பிறீ கிக்”கை தலையால் முட்டி டியாபிரா சாக்கோ கோலைப் பெற்றபோதும், போட்டியின் 21ஆவது நிமிடத்தில் போல் பொக்பாவிடமிருந்து பந்தைப் பெற்ற ஸல்டான் இப்ராஹிமோவிக் கோலொன்றினைப் பெற்று கோல் எண்ணிக்கையை சமப்படுத்தியிருந்தார்.
இடம்பெற்ற ஏனைய போட்டிகளில், 1-0 என்ற கோல் கணக்கில் வட்போர்ட்டை ஸ்டோக் சிற்றி தோற்கடித்ததுடன், 1-0 என்ற கோல் கணக்கில் எவெர்ற்றனை சௌதாம்டன் தோற்கடித்தது.
1 hours ago
3 hours ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago
4 hours ago
5 hours ago