Shanmugan Murugavel / 2024 செப்டெம்பர் 02 , பி.ப. 05:42 - 0 - {{hitsCtrl.values.hits}}

இத்தாலிய குரான் பிறீயானது ஞாயிற்றுக்கிழமை (01) நடைபெற்றபோது பெராரி அணியின் சார்ள்ஸ் லெக்கலெர்க் வென்றார்.
பந்தயத்தை நான்காமிடத்திலிருந்து ஆரம்பித்த மொனாக்கோவின் லெக்கலெர்க் வென்ற நிலையில், பந்தயத்தை இரண்டாமிடத்திலிருந்து ஆரம்பித்த மக்லரென் அணியின் ஒஸ்கார் பியாஸ்ட்ரி இரண்டாமிடத்தைப் பெற்றதோடு, பந்தயத்தை முதலாமிடத்திலிருந்து ஆரம்பித்த பியாஸ்திரியின் சக மக்லரென் அணியின் லான்டோ நொரிஸ் மூன்றாமிடத்தைப் பெற்றார்.
அந்தவகையில் இவ்வாண்டுக்கான போர்மியுலா வண் சம்பியன்ஷிப் புள்ளிகள் பட்டியலில் 303 புள்ளிகளுடன் முதலாமிடத்தில் நடப்புச் சம்பியனான றெட் புல் அணியின் மக்ஸ் வெர்ஸ்டப்பன் காணப்படுகின்றார். 241 புள்ளிகளுடன் இரண்டாமிடத்தில் பிரித்தானியாவின் நொரிஸும், 217 புள்ளிகளுடன் மூன்றாமிடத்தில் லெக்கலெர்க்கும் காணப்படுகின்றனர்.
33 minute ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
33 minute ago
4 hours ago
5 hours ago