Shanmugan Murugavel / 2025 டிசெம்பர் 23 , பி.ப. 06:36 - 0 - {{hitsCtrl.values.hits}}

இத்தாலிய சுப்பர் கிண்ணத் தொடரில் நாப்போலி சம்பியனானது.
சவுதி அரேபியாவில் செவ்வாய்க்கிழமை (23) நடைபெற்ற பொலொக்னாவுடனான இறுதிப் போட்டியில் 2-0 என்ற கோல் கணக்கில் வென்றே நாப்போலி சம்பியனானது.
நாப்போலி சார்பாக டேவிட் நெரேஸ், றஸ்முஸ் ஹொஜ்லுன்ட் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.
தனது அரையிறுதிப் போட்டியில் இத்தாலிய கிண்ணத் தொடரில் இரண்டாமிடம் பெற்ற ஏ.சி மிலனை 2-0 என்ற கோல் கணக்கில் வென்று நடப்பு சீரி ஏ சம்பியன்களான நாப்போலியும், மற்றைய அரையிறுதிப் போட்டியில் சீரி ஏ புள்ளிகள் பட்டியலில் இரண்டாமிடம் பெற்ற இன்டர் மிலனை பெனால்டியில் 3-2 என்ற ரீதியில் வென்று இத்தாலிய கிண்ண சம்பியன்களான பொலொக்னாவும் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றிருந்தன.
8 hours ago
17 Apr 2026
17 Apr 2026
17 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
17 Apr 2026
17 Apr 2026
17 Apr 2026