2025 மே 19, திங்கட்கிழமை

இந்தியக் குழாமுக்குத் திரும்பிய பும்ரா, ஹர்ஷால்

Shanmugan Murugavel   / 2022 செப்டெம்பர் 13 , பி.ப. 10:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடருக்கான இந்தியக் குழாமில் வேகப்பந்துவீச்சாளர்களான ஜஸ்பிரிட் பும்ரா, ஹர்ஷால் பட்டேல் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

ஆசியக் கிண்ணத் தொடரில் காயம் காரணமாக இவர்கள் இருவரும் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ரவி பிஷ்னோய் குழாமில் இடம்பெறவில்லை என்பதோடு, மேலதிக வீரர்கள் பட்டியலில் மொஹமட் ஷமி, தீபக் சஹர், ஷ்ரேயாஸ் ஐயருடன் இடம்பெற்றுள்ளார்.

இதேவேளை, அவுஸ்திரேலியாவுக்கெதிரான தொடரில் அர்ஷ்டீப் சிங்க்குக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளதோடு, தென்னாபிரிக்காவுக்கெதிரான தொடரில் ஹர்டிக் பாண்டியா, புவ்னேஷ்வர் குமாருக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு தொடர்களிலும் மொஹமட் ஷமி, தீபக் சஹர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

குழாம்: றோஹித் ஷர்மா (அணித்தலைவர்), லோகேஷ் ராகுல், விராட் கோலி, சூரியகுமார் யாதவ், தீபக் ஹூடா, றிஷப் பண்ட் (விக்கெட் காப்பாளர்), தினேஷ் கார்த்திக் (விக்கெட் காப்பாளர்), ஹர்டிக் பாண்டியா, இரவிச்சந்திரன் அஷ்வின், யுஸ்வேந்திர சஹால், அக்ஸர் பட்டேல், ஜஸ்பிரிட் பும்ரா, புவ்னேஷ்வர் குமார், ஹர்ஷால் பட்டேல், அர்ஷ்டீப் சிங்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X