Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
Shanmugan Murugavel / 2022 பெப்ரவரி 24 , பி.ப. 05:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை, இந்திய அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டித் தொடரானது, லக்னோவில் இன்றிரவு 7 மணிக்கு நடைபெறவுள்ள முதலாவது போட்டியுடன் ஆரம்பிக்கின்றது.
இலங்கை அணியைப் பொறுத்த வரையில் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து இன்னும் விடுபடாமை காரணமாக இத்தொடரையும் வனிடு ஹஸரங்க தவறவிடுவார் என எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில் அது பேரிழப்பாகவே காணப்படுகின்றது.
இந்நிலையில், மறுப்பக்கமாக சூரியகுமார் யாதவ், தீபக் சஹர், லோகேஷ் ராகுல் ஆகியோரை காயம் காரணமாக இழந்ததுடன், விராட் கோலி, றிஷப் பண்ட் ஆகியோருக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ள நிலையில், ஷ்ரேயாஸ் ஐயர், இஷன் கிஷன், சஞ்சு சாம்ஸன், ருத்துராஜ் கைகவாட் போன்றோரின் நிலையைத் தீர்மானிக்கும் தொடராக இத்தொடர் காணப்படுகின்றது.
தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் இந்தியாவுக்கு சவால் அளிக்க வேண்டுமெனில் குசல் மென்டிஸ், பானுக ராஜபக்ஷ உள்ளிட்டோரிடமிருந்து தொடர்ச்சியான பெறுபேறுகள் வேண்டப்படும்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .