2025 ஜூலை 21, திங்கட்கிழமை

இந்தியாவுக்கெதிராக ஆப்கானின் முதலாவது டெஸ்ட்

Editorial   / 2017 டிசெம்பர் 12 , பி.ப. 09:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமது முதலாவது டெஸ்ட் போட்டியை, இந்தியாவுக்கெதிராக ஆப்கானிஸ்தான் விளையாடவுள்ளது.

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையின் பிரதம நிறைவேற்றதிகாரி ராகுல் ஜொஹ்ரி, ஆப்கானிஸ்கெதிராக இந்தியாவில் வைத்து இந்தியா விளையாடும் என்பதை உறுதிப்படுத்தியுள்ளார்.

இந்நிலையில், எந்த மைதானத்தில், எப்போது போட்டி நடைபெறும் என்பது தொடர்பாக, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையும் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் சபையும் ஆராய்ந்து வருகிறது.

அடுத்தாண்டு பெரும்பாலும் வெளிநாடுகளியே இந்தியா போட்டிகளில் பங்கேற்கையில், அடுத்தாண்டு பிற்பகுதியில் அவுஸ்திரேலியாவுக்கு இந்தியா சுற்றுப் பயணம் மேற்கொள்ள முதல் ஆப்கானிஸ்தானுக்கெதிரான டெஸ்ட் போட்டியில் இந்தியா விளையாடும் என எதிர்பார்க்கப்படுகிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X